தேசிய செய்திகள்

மெட்ரோ ரெயில் பாதையில் மின்வயர்கள் திருட்டு + "||" + Theft of electric wires on the Metro Rail track

மெட்ரோ ரெயில் பாதையில் மின்வயர்கள் திருட்டு

மெட்ரோ ரெயில் பாதையில் மின்வயர்கள் திருட்டு
மெட்ரோ ரெயில் பாதையில் இருந்த மின்வயர்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லி எலக்ட்ரானிக் சிட்டி அருகே மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. மேம்பாலத்தில் செல்லும் இந்த ரெயில் பாதையில் உள்ள மின்கம்பங்களில் ஏறிய மர்மநபர்கள் மின் வயர்களை வெட்டி திருடிச்சென்றனர்.


முன்னதாக அவர்கள் மின்கம்பங்களின் மீது இரும்பு கம்பியை வீசி மின் இணைப்பை துண்டித்தபின் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து காசியாபாத் போலீசார் விசாரணை நடத்தி அருகில் உள்ள கோடா கிராமத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 மீட்டர் நீளம் கொண்ட 4 கட்டு மின் வயர்களை பறிமுதல் செய்தனர்.