குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு - எல்லை பாதுகாப்பு படை தீவிர விசாரணை


குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு - எல்லை பாதுகாப்பு படை தீவிர விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2019 8:10 PM GMT (Updated: 14 Dec 2019 8:10 PM GMT)

குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகினை மீட்டு, எல்லை பாதுகாப்பு படை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் ஹரமினாலா என்ற இடத்தில் கடல் முகத்துவார பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகு ஒன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கேட்பாரற்று இருந்தது. அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த படகை கண்டுபிடித்தனர். அதில் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என தெரிந்தது.

ஆனாலும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். அந்த இடம் மிகவும் மோசமான சதுப்புநில பகுதி என்பதால் வழக்கமாக அங்கு மீனவர்கள் வரமாட்டார்கள். ஆனால் பாகிஸ்தான் மீனவர்கள் நல்ல மீன்வளத்துக்காக அங்கு வந்திருக்கலாம் என்றும், பாதுகாப்பு படையினர் வருவதை பார்த்ததும் படகை விட்டு தப்பியிருக்கலாம் என்றும் தெரிகிறது.

Next Story