நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு மே.வங்க ஆளுநர் உத்தரவு


நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்: மம்தா பானர்ஜிக்கு மே.வங்க ஆளுநர் உத்தரவு
x
தினத்தந்தி 16 Dec 2019 2:06 PM GMT (Updated: 16 Dec 2019 2:06 PM GMT)

மேற்கு வங்கத்தில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து மம்தா பானர்ஜியை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளதாக ஆளுநர் ஜெக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த சட்டத்துக்கு முதல்–மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் இன்று பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதில் முதல்–மந்திரி மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். இதற்கு கவர்னர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அம்மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆளுநர் ஜகதீப் தன்கர் நேற்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை. 

இந்த நிலையில், மம்தா பானர்ஜியை நேரில் வந்து சந்திக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேற்குவங்க மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‘‘மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து,  நீங்கள் விரும்பிய  நேரத்தில் ராஜ்பவனுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கோரியுள்ளேன். 

மாநில தலைமைச் செயலாளரையும், காவல்துறை தலைவரையும் அழைத்து இருந்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை. இது துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதது” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story