மும்பை பங்கு சந்தை; புதிய உச்சம் எட்டிய சென்செக்ஸ் குறியீடு


மும்பை பங்கு சந்தை; புதிய உச்சம் எட்டிய சென்செக்ஸ் குறியீடு
x
தினத்தந்தி 17 Dec 2019 11:23 AM GMT (Updated: 17 Dec 2019 11:23 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய உச்சத்தினை அடைந்தது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வழக்கம்போல் வர்த்தகம் தொடங்கிய நிலையில், நாளின் மத்திய பகுதியில் திடீரென இதுவரை இல்லாத வகையில் சென்செக்ஸ் குறியீடு 41,401.65 புள்ளிகளுடன் புதிய உச்சத்தினை அடைந்தது.

பின்னர் 413.45 புள்ளிகள் அல்லது 1.01 சதவீதம் என்ற உயர்வுடன் 41,352.17 புள்ளிகளுடன் நிலை கொண்டது.  இதுவரை இல்லாத வகையில் இந்த உயர்வு அமைந்துள்ளது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 111.05 புள்ளிகள் அல்லது 0.92 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வர்த்தக நிறைவில் 12,165 புள்ளிகளாக இருந்தது.  இதுவும் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

சென்செக்ஸ் மதிப்பீட்டில் டாடா ஸ்டீல் 4.38 சதவீதம் என்ற அளவில் அதிக லாபத்துடன் இருந்தது.  இதனை தொடர்ந்து பாரதி ஏர்டெல் 4.37 சதவீதமும், வேதாந்தா 3.50 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 3.03 சதவீதமும், எச்.டி.எப்.சி. 2.46 சதவீதமும் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் 2.39 சதவீதமும் லாபத்துடன் இருந்தன.  இன்றைய வர்த்தகத்தில் உலோகம், நிதி மற்றும் ஐ.டி. நிறுவன பங்குகள் அதிக லாபம் அடைந்திருந்தன.

அதேவேளையில், சன் பார்மா 1.37 சதவீதமும், எம் அண்டு எம் 0.63 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 0.56 சதவீதமும் மற்றும் எச்.யூ.எல். 0.48 சதவீதமும் சரிவை சந்தித்தன.

இதுபற்றி வர்த்தக நிபுணர்கள் கூறும்பொழுது, அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தக ஒப்பந்தத்தில் முன்னேற்ற நிலை, நாளை நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சாதக முடிவுகள் எட்டப்பட கூடும் என்ற எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் உள்ளூர் சந்தைகள் லாபத்துடன் இருந்துள்ளன என கூறியுள்ளனர்.

Next Story