எந்த மதத்தினரையும் வெளியேற்ற மாட்டோம்: முஸ்லிம்களும் குடியுரிமை கோரலாம் - பா.ஜனதா அறிவிப்பு


எந்த மதத்தினரையும் வெளியேற்ற மாட்டோம்: முஸ்லிம்களும் குடியுரிமை கோரலாம் - பா.ஜனதா அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2019 7:18 PM GMT (Updated: 18 Dec 2019 7:18 PM GMT)

எந்த மதத்தினரையும் வெளியேற்ற மாட்டோம் என்றும், முஸ்லிம்களும் குடியுரிமை கோரலாம் என்றும் பா.ஜனதா அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பா.ஜனதாவின் முக்கியமான வட்டாரங்கள் கூறியதாவது:-

குடியுரிமை சட்டம், எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. எந்த தனிநபரையும், மதத்தினரையும் வெளியேற்ற போவதில்லை. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், தகுதி உடையவராக இருந்தால், ஏற்கனவே உள்ள சட்டப்படியே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 2014-ம் ஆண்டுக்கு பிறகு, வங்காளதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் உள்ளிட்ட 14 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அரைகுறை தகவல்கள் மற்றும் தவறான வழிநடத்தல்கள் அடிப்படையில் போராட்டம் நடந்து வருகிறது. இதை விளக்கும் வகையில் மக்களிடையே வெள்ளை அறிக்கை வினியோகித்து வருகிறோம்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story