தேசிய செய்திகள்

சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு + "||" + Firing on Shiv Sena functionary in Mumbai; assailant nabbed

சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு

சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு
சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் ஒருவர் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
விக்ரோலி,

சிவசேனாவின் நிர்வாகிகளில் ஒருவரான சேகர் ஜாதவ் இன்று காலை விக்ரோலி புறநகர் பகுதியில் தகோர் என்ற இடத்தில் சாய் மந்திர் அருகே காலை 8 மணியளவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.  இதனை அடுத்து அவர் மீட்கப்பட்டு விக்ரோலி பகுதியிலுள்ள கோத்ரெஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  துப்பாக்கி சூடு நடத்திய நபரை அந்த பகுதி மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் அருகே, சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது கும்பல் துப்பாக்கி சூடு - குண்டு பாய்ந்து 3 பேர் காயம்
வேலூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக்கேட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 3 பேர் காயமடைந்தனர்.
2. பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு: இந்திய ராணுவம் பதிலடி
பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடித்தது.
3. 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த ஊழியர்
அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்ட ஊழியர்.
4. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணைய 19-வது கட்ட விசாரணை தொடங்கியது, ரஜினிகாந்த் உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராக சம்மன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 19-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
5. ஜெர்மனியில் அடுத்தடுத்து பயங்கரம் மதுபான விடுதிகளில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
ஜெர்மனியில் 2 மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் தனது தாயை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்தார்.