தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மன்மோகன் சிங் -பரபரப்பு வீடியோ + "||" + "In 2003...": BJP Pulls Out Old Video Of Manmohan Singh On Citizenship

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மன்மோகன் சிங் -பரபரப்பு வீடியோ

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மன்மோகன் சிங் -பரபரப்பு வீடியோ
சிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில் அரசு தாராள அணுகுமுறையை கையாள வேண்டும் என்று மன்மோகன்சிங் பேசிய 2003-ம் ஆண்டு வீடியோவை வெளியிட்டு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி,

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2003-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மன்மோகன் சிங், அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில்,  மன்மோகன் சிங் பேசியிருப்பதாவது; - “அகதிகளை கையாள்வது குறித்து சிலவற்றை நான் பேச விரும்புகிறேன். பிரிவினைக்கு பிறகு வங்காளதேசம் போன்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.  சூழ்நிலைகள் மக்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் போது,  துரதிருஷ்டவசமாக  இந்த மக்கள் நமது நாட்டில் அடைக்கலம் கோருகிறார்கள். எனவே, இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதில் தாராள அணுகுமுறையை அரசு கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

2003-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது அப்போது எதிர்க்கட்சி  தலைவராக இருந்த மன்மோகன் சிங், மாநிலங்களவையில் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து வரும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை வழங்க வழி செய்யும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றி வரும் நிலையில், பாஜக இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பதிலடியை கொடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் ; கெஜ்ரிவால் பாய்ச்சல்
டெல்லி காவல்துறையை அமித்ஷா தவறாக பயன்படுத்துகிறார் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
2. மத்திய பட்ஜெட்: புரிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்படுகிறது - மன்மோகன் சிங்
மத்திய பட்ஜெட்டை புரிந்து கொள்ள வெகு நேரம் தேவைப்படுகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
3. ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4. நான் பயங்கரவாதியா? டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் வேதனை
கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்து பாஜக நட்சத்திர பேச்சாளராக நியமிக்கப்பட்டு இருந்த பர்வேஷ் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
5. பாஜகவுக்கு துரோகம் இழைத்துவிட்டது சிவசேனா : தேவேந்திர பட்னாவிஸ் கடும் தாக்கு
பாஜகவுக்கு, சிவசேனா துரோகம் இழைத்துவிட்டதாக மராட்டிய முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக சாடினார்.