போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் ; மாணவர்கள், மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றறிக்கை


போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் ; மாணவர்கள், மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2019 12:11 PM GMT (Updated: 19 Dec 2019 12:14 PM GMT)

மாணவர்கள், மருத்துவர்கள் எந்த வகையான போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழக  மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராகவும் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்கள், தர்ணா, வேலை நிறுத்தம் என எதிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகங்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story