ஜர்கண்ட் சட்டப் பேரவை தேர்தல் ; 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது


ஜர்கண்ட் சட்டப் பேரவை தேர்தல் ; 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 20 Dec 2019 1:37 AM GMT (Updated: 20 Dec 2019 1:37 AM GMT)

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.  81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், 5-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 16 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.  5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 5ம் கட்ட தேர்தலில், 40,05,200 வாக்காளர்கள் ஓட்டுபோட தகுதி பெற்றவர்கள். 5 கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 

Next Story