தேசிய செய்திகள்

பாலியல் குற்றங்களில் விரைவான நீதி கிடைக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே மவுன விரதம் + "||" + Anna Hazare fasting silent urging quick to do justice in sexual offenses

பாலியல் குற்றங்களில் விரைவான நீதி கிடைக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே மவுன விரதம்

பாலியல் குற்றங்களில் விரைவான நீதி கிடைக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே மவுன விரதம்
பாலியல் குற்றங்களில் விரைவான நீதி கிடைக்க வலியுறுத்தி அன்னா ஹசாரே மவுன விரதம் தொடங்கினார்.
மும்பை,

டெல்லி நிர்பயா கற்பழிப்பு வழக்கு மற்றும் நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடூர பாலியல் குற்றங்களில் விரைவாக நீதி கிடைக்க வலியுறுத்தி டிசம்பர் 20-ந் தேதி(நேற்று) முதல் மவுன விரதம் இருக்க போவதாக காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி அன்னா ஹசாரே நேற்று மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான ரலேகான் சித்தி கிராமத்தில் மவுன விரத போராட்டத்தை தொடங்கினார்.


முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிர்பயா வழக்கில் விரைவான நீதி வழங்கப்பட வேண்டும் என்று மவுன விரதத்தை தொடங்கி உள்ளேன். அவ்வாறு நீதி கிடைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன். போலீஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் ஏற்படும் தாமதத்தால்தான் ஐதராபாத்தில் கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் நீதித்துறையின் மீதான நம்பிக்கையின்மையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் குற்றங்களுக்கு தீர்வுதான் என்ன?
டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை, 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நடந்தது. ஆனால் இந்நாள் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை!