உலகளவில் எந்த நாட்டில் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது?


உலகளவில் எந்த நாட்டில் அதிகளவில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது?
x
தினத்தந்தி 21 Dec 2019 7:59 AM GMT (Updated: 21 Dec 2019 7:59 AM GMT)

இந்தியாவில் 2015 முதல் எந்தவொரு மரணதண்டனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இந்திய நீதிமன்றங்கள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

புதுடெல்லி

இந்தியாவில் நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதுபோல் ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் 4 பேருக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்துள்ளது.

இந்தியாவில் 2015 முதல் எந்தவொரு மரணதண்டனையும்  மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், இந்திய நீதிமன்றங்கள் மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. மற்ற நாடுகளில் இந்தியாவை விட அதிக மரணதண்டனை விகிதங்கள் உள்ளன.

உலகளவில், மரணதண்டனைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது, கடந்த ஆண்டு ஒரு தசாப்தத்தில் மிகக் குறைந்து உள்ளதாக மனித உரிமைகள் குழு அம்னஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் முறையே 45 மற்றும் 58 என்ற விகிதத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு பெரும்பாலான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டது.

1947-ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, பெரும்பான்மையான மரணதண்டனைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு உத்தரபிரதேசம் 354 பேரை தூக்கிலிட்டுள்ளது, அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் 90 பேர் அரியானாவும்,  73  பேரை மத்தியப் பிரதேசமும் தூக்கிலிட்டு உள்ளது.

2018 ஆம் ஆண்டில் மட்டும் நீதிமன்றங்கள் 162 புதிய மரண தண்டனைகளை விதித்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 50 சதவீதம்  அதிகம் மற்றும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் மிக உயர்ந்தது ஆகும்.

பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீதிமன்றங்கள் வழங்கிய மரண தண்டனைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதற்கு நேர்மாறாக, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் 250-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் வழங்கப்பட்டு உள்ளது. வங்காளதேசத்தில்  229-க்கும் மேற்பட்ட மரண தண்டனை வழங்கப்பட்டு உள்ளன.

ஆனால் உலகளவில், 2017-ஐ (2,591) விட 2018-ல் (2,531) சற்றே குறைவான மரண தண்டனைகள் பதிவாகியுள்ளன.



மரண தண்டனைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அம்னஸ்டி இன்டர்நேஷனல், கடந்த ஆண்டு 690 மரணதண்டனைகள் நடந்ததாக கூறி உள்ளது. இது 2017 உடன் ஒப்பிடும்போது 30 சதவீதத்துக்கும் குறைவு.

2018 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட அனைத்து மரணதண்டனைகளிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஈரான், சவூதி அரேபியா, வியட்நாம், ஈராக் ஆகிய  நான்கு நாடுகளில் நடந்தது.

ஒரு அபூர்வ உத்தியோகபூர்வ கருத்தில், வியட்னாம் கடந்த ஆண்டு நவம்பரில் 85 மரணதண்டனைகளை நிறைவேற்றியதை உறுதிப்படுத்தியது. முந்தைய ஆண்டுகளில், வியட்னாம் மரணதண்டனைகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  2017 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு மரணதண்டனைகளின் எண்ணிக்கையில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் வியட்னாமில் இருந்து வந்த புள்ளி விவரங்களாகும். ஜப்பான் 15 பேரையும், பாகிஸ்தானில் குறைந்தது 14 பேரையும், சிங்கப்பூர் 13 பேரையும் தூக்கிலிட்டது.

அமெரிக்காவில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, முந்தைய ஆண்டை விட சற்றே அதிகமான மரணதண்டனைகள் இருந்தன.

2018 ஆம் ஆண்டில் அறியப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கை பாகிஸ்தானில் இருந்தது. 4,864-க்கும் மேற்பட்ட மரண தண்டனை வழக்குகள் உள்ளன.

வங்காளதேசத்தில் மரண தண்டனைக்கு 1,500-க்கும் மேற்பட்ட வழக்குகள்  இருந்ததாக அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது.

தேசிய சட்ட பல்கலைக்கழக தரவுகளின்படி, கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 426 பேர் இருந்தனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொலை குற்றவாளிகள், மேலும் 21.8 சதவீதம்  கற்பழிப்புடன் கொலைக் குற்றவாளிகள்.

Next Story