தெலுங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலுக்கு எய்ம்ஸ் டாக்டர் குழு மூலம் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை


தெலுங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலுக்கு எய்ம்ஸ் டாக்டர் குழு மூலம் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 22 Dec 2019 8:55 PM GMT (Updated: 22 Dec 2019 8:55 PM GMT)

தெலுங்கானாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடலுக்கு எய்ம்ஸ் டாக்டர் குழு மூலம் இன்று மீண்டும் பிரேத பரிசோதனை நடத்ததுகிறது.

புதுடெல்லி,

தெலுங்கானாவில் கால்நடை பெண் டாக்டர் ஒருவரை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த சம்பவத்தில் கைதான 4 குற்றவாளிகளை போலீசார் கடந்த 6-ந்தேதி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அவர்களது உடலுக்கு மெகபூப்நகர் ஆஸ்பத்திரியில் அன்றே பிரேத பரிசோதனை நடந்தது.

இதற்கிடையே 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒரு போலி என்கவுண்ட்டர் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு, 4 பேரின் உடலையும் தெலுங்கானா காந்தி ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கவும், 23-ந்தேதிக்குள் (இன்று) மீண்டும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 4 பேரின் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் டாக்டர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தலைமையில் 4 டாக்டர்கள் கொண்ட இந்த குழுவினர் நேற்று தெலுங்கானா வந்தனர்.

அவர்கள் காந்தி மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) காலையில், 4 குற்றவாளிகளின் உடலையும் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை கோர்ட்டில் வழங்குவார்கள் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story