தேசிய செய்திகள்

ஜார்கண்ட் தேர்தல்: பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை + "||" + Jharkhand Election: Beyond the majority   Congress Alliance Leader

ஜார்கண்ட் தேர்தல்: பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜார்கண்ட் தேர்தல்: பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
ஜார்கண்ட் தேர்தலில் பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, முன்னணி நிலவரம் தெரிய வந்த 78 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி  45 இடங்களிலும் பாஜக கூட்டணி  25 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.