குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது : மாயாவதி


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது : மாயாவதி
x

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

 இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 15 பேர் பலியாகினர். இந்த நிலையில்  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி வன்முறைக்கு எதிரானது என்று தெரிவித்துள்ள மாயாவதி, உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story