தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி + "||" + West Bengal: Bharatiya Janata Party lead rally in Kolkata in support of Citizen ship Ammendment Act

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தியது.
கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தினார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை கண்டித்தும் கடந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குடியுரிமை திருத்த சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடத்தப்பட்டது. மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: டெல்லியில் வன்முறை - போலீஸ்காரர் பலி ; துப்பாக்கி சூடு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் டெல்லியில் வன்முறை ஏற்பட்டது, இதில் போலீஸ்காரர் ஒருவர் பலியானர் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
2. இளையான்குடியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 7-வது நாளாக இளையான்குடியில் போராட்டம் நடந்தது.
3. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டது.
4. குடியுரிமை திருத்த சட்டத்தை புதைத்துவிட வேண்டும் - மதுரை போராட்டத்தில் வைகோ பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தை அடியோடு புதைத்துவிட வேண்டும் என்று மதுரை போராட்டத்தில் வைகோ பேசினார்.
5. இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் - அமெரிக்கா
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) தெரிவித்துள்ளது.