ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம்: ‘சி.பி.ஐ. செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது’ - தந்தை பேட்டி


ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம்: ‘சி.பி.ஐ. செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது’ - தந்தை பேட்டி
x
தினத்தந்தி 23 Dec 2019 9:40 PM GMT (Updated: 23 Dec 2019 9:40 PM GMT)

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ. செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக, அந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கொல்லம்,

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை, சென்னை குற்றப்பிரிவில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டாலும், சி.பி.ஐ. தரப்பில் இருந்து யாரும் எங்களை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இது எனக்கு பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது. என் மகள் இறந்து 40 நாட்கள் ஆகிவிட்டன. நானும், என் குடும்பத்தினரும் தினமும் அழுது கொண்டிருக்கிறோம். எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

பாத்திமா தனது கடிதத்தில் குற்றம் சாட்டிய 3 பேராசிரியர்களுக்கும், தற்கொலையில் தொடர்பு இல்லை என்று சென்னை குற்றப்பிரிவு கூறி விட்டதாக வரும் தகவல்கள் 101 சதவீதம் தவறானவை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story