நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்காதீர்கள் : கேரளா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்


நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்காதீர்கள் : கேரளா, மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள்
x
தினத்தந்தி 24 Dec 2019 3:41 PM GMT (Updated: 24 Dec 2019 3:41 PM GMT)

நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்காதீர்கள் என்று கேரளா மற்றும் மேற்கு வங்காள முதல்-மந்திரிகளுக்கு அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா கூறியதாவது:-

என்ஆர்சி தொடர்பாக விவாதிக்க எந்தவித தேவையும் இல்லை என்று பிரதமர்  சரியாக கூறியுள்ளார், நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இது குறித்து விவாதம் தேவையில்லை.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், தேசிய குடிமக்கள்  பதிவேட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்.பி.ஆர்க்கு எதிரான முடிவை கேரளா மற்றும் மேற்குவங்க முதல்-மந்திரிகள் மறுபரிசீலனை செய்ய  வேண்டும்.

உங்கள் அரசியலுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களை தடுக்க வேண்டாம் , தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் இப்போது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story