தேசிய செய்திகள்

கிரண்பேடி முட்டுக்கட்டை; புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு + "||" + Kiran Bedi is impeding development of Puducherry; CM Narayanasamy alleges

கிரண்பேடி முட்டுக்கட்டை; புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

கிரண்பேடி முட்டுக்கட்டை; புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி வளர்ச்சிக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் என முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி,

திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வருகை தந்துள்ளார்.  அவரது வருகையையொட்டி, திருநள்ளாறில் துணை ராணுவ வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியுடன் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோரும் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில், அவரிடம் மனு ஒன்றை நாராயணசாமி அளித்து உள்ளார்.

இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் நாராயணசாமி, 

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்று தனவேலு எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
2. கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
கொரோனா வைரசை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
3. தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி பாலகிரு‌‌ஷ்ணன் குற்றச்சாட்டு
தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.
4. மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக, செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
5. அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க ரங்கசாமி முயற்சி நாராயணசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க., பா.ஜ.க. தலைவர்களுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க ரங்கசாமி முயற்சிக்கிறார் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.