தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு; 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு + "||" + Section 144 imposed in Uttar Pradesh amid CAA protests, internet suspended in 14 cities

உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு; 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு

உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு; 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு
உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு. 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலந்த்சாகர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், சஹரன்பூர், காஜியாபாத், முசாபர்நகர், ஃபிரோசாபாத், மதுரா, ஷாம்லி மற்றும் அலிகார் உள்பட  14  மாவட்டங்களில் வதந்திகளைத் தவிர்க்க இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் தொழுகை நடத்தும் மக்களை கருத்தில் கொண்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லக்னோ, அயோத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோரக்பூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறைகள் போல் எங்கும் ஏற்படாதிருக்க துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி, அமைதியை காக்கும்படி வலியுறுத்தினர். சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். 

இதற்கிடையில், சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் டிசம்பர் 10 முதல் 24 வரை  வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக 498 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அவர்களுக்கு  ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும்போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 'சமூக விரோதிகளை' அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. சேதங்களை ஈடு செய்ய  அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும்.

லக்னோவில்  82 பேர், மீரட்டில்  148 பேர், சம்பலில்  26 பேர், ராம்பூரில் 79 பேர், பெரோசாபாத்தில்  13 பேர், கான்பூரில்  50 பேர், முசாபர்நகரில்  73 பேர், மாவோவை சேர்ந்த 8 பேர் மற்றும் புலந்த்சாகரை சேர்ந்த 19 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

லக்னோ டிஜிபி தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில்  வன்முறை  மற்றும் தீவைப்பு ஆகியவற்றிற்காக மொத்தம் 213 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,558 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை வெளியிட்டதற்காக மொத்தம் 81  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7,513 ட்விட்டர் பதிவுகள், 9,076 பேஸ்புக் பதிவுகள் மற்றும் 172 யூடியூப் வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் ஒரே ஆண்டில் 9,261 கால்நடைகள் சாவு
உத்தரபிரதேசத்தில் ஒரே ஆண்டில் 9,261 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
2. உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா? - இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்
உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரம் டன் தங்கம் உள்ளதா என்பது குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
3. உத்தரபிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு: வெட்டி எடுக்க இ-டெண்டர் மூலம் ஏலம்
3 ஆயிரம் டன் தங்கம் எடுக்கக்கூடிய தங்க சுரங்கம் உத்தரபிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெட்டி எடுப்பதற்காக இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.
4. அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணையுங்கள் மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அறிவுரை
உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
5. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? -யோகி ஆதித்யநாத்
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது சாக வேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.