தேசிய செய்திகள்

இந்த ஆண்டின் சிறந்த ‘பொய்யர்’ ராகுல் காந்தி- பாஜக கடும் தாக்கு + "||" + "If There Was Category Of Liar Of The Year...": BJP Attacks Rahul Gandhi

இந்த ஆண்டின் சிறந்த ‘பொய்யர்’ ராகுல் காந்தி- பாஜக கடும் தாக்கு

இந்த ஆண்டின் சிறந்த ‘பொய்யர்’ ராகுல் காந்தி- பாஜக கடும் தாக்கு
இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அதை பெறுபவர் ராகுல் காந்தியாகத்தான் இருப்பார் என்று பாஜக சாடியுள்ளது.
புதுடெல்லி,


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி என்று கூறியிருந்தார். இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

புதிய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து நாட்டில் உறுதியற்ற நிலையை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது. ஆனால் மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தேசிய மக்கள் தொகை பதிவேடு பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாது. அந்த தகவல்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் குறிப்பிட்டவர்களுக்கு சேர வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ஏழைகளை அடையாளம் காண மட்டுமே பயன்படுத்தப்படும்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர் எதையும் பேசுவார், அனைத்து நேரங்களிலும் பொய் பேசுவார். இப்போது அவர் நீண்ட காலம் தலைவராக நீடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பொய் பேசுகிறார். இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அதை பெறுபவர் ராகுல் காந்தியாகத்தான் இருப்பார்"இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவ உயர் பதவி அளிக்க மறுப்பதா? பெண்களை அவமரியாதை செய்கிறது, மத்திய அரசு ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெண்களை மத்திய அரசு அவமரியாதை செய்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
2. புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? ராகுல் காந்தி கேள்வி
புல்வாமா தாக்குதலால் அதிகம் பயன்பெற்றது யார் ? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் -ராகுல் காந்தி உறுதி
எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்தினருக்கான வேலை மற்றும் பதவி உயர்வில் உள்ள இடஒதுக்கீட்டை அழிக்க விடமாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
4. பிரதமர் மோடி தாஜ்மஹாலை கூட ஒரு நாள் விற்று விடக்கூடும் - ராகுல்காந்தி கிண்டல்
பிரதமர் மோடி தாஜ்மஹாலை கூட விற்று விடக்கூடும் என்று டெல்லி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசினார்.
5. மத்திய பட்ஜெட் : ராகுல் காந்தி விமர்சனம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் வெற்று அறிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.