தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் : முஸ்லிம்களிடம் விளக்கம் அளிக்க பாஜக குழு அமைப்பு + "||" + BJP forms panel to reach out to Muslims

குடியுரிமை திருத்த சட்டம் : முஸ்லிம்களிடம் விளக்கம் அளிக்க பாஜக குழு அமைப்பு

குடியுரிமை திருத்த சட்டம் : முஸ்லிம்களிடம் விளக்கம் அளிக்க  பாஜக குழு அமைப்பு
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முஸ்லிம்களிடம் விளக்கம் அளிக்க பாஜக குழுவை நியமித்து உள்ளது.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில், முஸ்லிம் சமூகத்திடம் விளக்கம் அளிக்கவும் , சிஏஏ மற்றும் குடிமக்களுக்கான தேசிய பதிவு (என்ஆர்சி) மீதான சந்தேகங்களைத் தீர்க்கவும் முறைசாரா குழுவை பாஜக அமைத்துள்ளது.

மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார். இதில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் கயோருல் ஹசன் ரிஸ்வி மற்றும் சில முக்கிய முஸ்லிம் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 ரிஸ்வியைத் தவிர, கட்சியின் சிறுபான்மை மோர்ச்சா தலைவர் அப்துல் ரஷீத் அன்சாரியும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. "புதிய குடியுரிமைச் சட்டம், என்.ஆர்.சி. மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு ஆகியவற்றில் சில அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படும் தவறான தகவல் பிரசாரத்தை இடிப்பதே இதன் யோசனை" என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இந்த பிரச்சினைகளின் முக்கிய அம்சங்கள் மற்றும் "எதிர்க்கட்சிகள்  எவ்வாறு குழப்பத்தை பரப்புகிறது" என்பது குறித்து முஸ்லிம்களுக்கு தெரிவிக்க தேசிய அளவில் முதல் திட்டம் ஜனவரி முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ஜனவரி முதல் வாரத்தில் முஸ்லிம்  சமூகத்துடன் கலந்துரையாடல் நடத்துவதற்கான  சில திட்டங்களை வகுத்துள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
குடியுரிமை திருத்த சட்டம் எந்தவகையிலும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
2. பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி
பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஊட்டியில் பேரணி நடந்தது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எஸ்.புதூர் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
4. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வங்கியில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
5. குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். சட்டம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...