கேரள பல்கலைக்கழகத்தில் கவர்னருக்கு எதிராக போராட்டம்; பாதியிலேயே பேச்சை முடித்து திரும்பினார்


கேரள பல்கலைக்கழகத்தில் கவர்னருக்கு எதிராக போராட்டம்; பாதியிலேயே பேச்சை முடித்து திரும்பினார்
x
தினத்தந்தி 28 Dec 2019 11:25 AM GMT (Updated: 28 Dec 2019 11:25 AM GMT)

கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பேசிய கவர்னருக்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கவர்னர் பாதியிலேயே பேச்சை முடித்தார்.

கண்ணூர்,

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் 80-வது இந்திய வரலாற்று மாநாடு இன்று தொடங்கியது.  இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டை தொடங்கி வைத்து கவர்னர் ஆரிப் முகமது கான் பேசினார். 

விழாவில் பேசிய கவர்னர் கூறியதாவது;-

கேரளாவில் மக்கள் பிரிவினையால் பாதிக்கப்படவில்லை. இங்குள்ள மக்களுக்கு பச்சாதாபம் இருந்தது. பிரச்சினை தெரியாமல் கூட அவர்கள் வந்து பக்கத்து வீட்டுக்காரர் கிளர்ந்தெழுந்தபோது சேர்ந்து கொண்டனர் என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்திக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை மூன்று சந்தர்ப்பங்களில் அழைத்த போதிலும், அவர்கள் பேச மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டினார். விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கான கதவை நீங்கள் மூடும்போது, நீங்கள் வன்முறை கலாச்சாரத்தை உருவாக்குகிறீர்கள், அவர்கள் பயப்படுவதால் அவர்கள் விவாதிக்க முன்வரவில்லை என பேசினார்.

பாகிஸ்தான் காஷ்மீர்  இன்னும் முடிக்கப்படாத கதை என்று அவர் சுட்டிக்காட்டியபோது, மாணவர் பிரதிநிதிகள்  குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்களின் பதிவு (NRC) ஆகியவற்றைக் கண்டித்து பதாகைகளை காட்டினர்.

காவல்துறையினர் போராட்டக்காரர்களைத் தடுக்க முயன்றபோது, மாணவர்கள் ஆத்திரமடைந்து கவர்னருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் கோபமடைந்த கவர்னர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம், நீங்கள் என்னை நோக்கி கத்த முடியாது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அவர்கள் ஒரு திட்டமிட்டு வந்ததாக அவர் கூறினார்.

அந்த இடத்தில் குழப்பத்தையும், வன்முறையையும் உருவாக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஐ.எச்.சி.யின் முன்னாள் தலைவரான பேராசிரியர் இர்பான் ஹபீப், கவர்னரிடம்  பேச முயன்றபோது கூட அவர் கோபமடைந்தார்.  காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசுவதை  தடுக்க உரிமை இல்லை என்று அவரிடம் கூறினார்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றை  சேர்ந்த 4 மாணவர் பிரதிநிதிகளை போலீசார் அழைத்துச் சென்றனர்.கண்ணூர் பல்கலைக்கழகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பிரதிநிதிகளைத் தூண்டுவதற்காக கவர்னர், காஷ்மீர் பிரச்சினை மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை எழுப்பியதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். 

Next Story