தேசிய செய்திகள்

ஜனநாயக நாட்டில் வன்முறையை எந்தளவிலும் ஏற்க முடியாது; மத்திய மந்திரி பேட்டி + "||" + Violence in a democratic country cannot be tolerated; Union Minister

ஜனநாயக நாட்டில் வன்முறையை எந்தளவிலும் ஏற்க முடியாது; மத்திய மந்திரி பேட்டி

ஜனநாயக நாட்டில் வன்முறையை எந்தளவிலும் ஏற்க முடியாது; மத்திய மந்திரி பேட்டி
ஜனநாயக நாட்டில் வன்முறையை எந்த அளவிலும் ஏற்று கொள்ள முடியாது என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 19ந்தேதி முதல் 21ந்தேதி வரை போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இவற்றில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. ஏராளமான பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இதேபோன்று லக்னோ, மீரட் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.  போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே சில இடங்களில் மோதல்  ஏற்பட்டது. போராட்டத்தில் நடந்த வன்முறையில் 19 பேர் பலியாகினர்.

போராட்டம் நடத்தியவர்களை போலீஸ் அதிகாரியும், மீரட் எஸ்.பி.யுமான அகிலேஷ் நாராயணன், "பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்" என்று கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்துக்குள்ளானது.

இதுபற்றி அவர் அளித்த விளக்கத்தில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் போலீஸ் மீது கற்களை வீசி "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.  அதனால், பாகிஸ்தானை அவ்வளவு விரும்பினால் அங்கே சென்று விடுங்கள் என்றுதான் கூறினேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இந்த வீடியோ பற்றி கூறும்பொழுது, வீடியோவில் பேசியது போன்று எஸ்.பி. கூறியிருந்தது உண்மை எனில் அது கண்டனத்திற்குரியது.  அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போலீசாராலோ அல்லது கும்பலாலோ எந்த அளவிலான வன்முறையும் ஏற்று கொள்ள முடியாதது.  ஜனநாயக நாட்டின் ஒரு பகுதியாக அது இருக்காது.  ஒன்றுமறியாத மக்கள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதில் போலீசார் கவனம் கொண்டு செயல்பட வேண்டும் என்று நக்வி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வன்முறை
மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், அர்ஷிதா ஸ்ரீதர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’வன்முறை’ படத்தின் முன்னோட்டம்.
2. உ.பி. வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ‘பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா’ தலைவர் உள்பட 3 பேர் கைது
உ.பி. வன்முறைக்கு மூளையாக செயல்பட்ட ‘பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா’ தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மம்தா கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு - விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்
உத்தரபிரதேச வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்திக்க மம்தா கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் விமான நிலையத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
4. மராட்டியத்தில் 4 மாவட்டங்களில் வன்முறை; 12 பேர் காயம்; பஸ்கள் உடைப்பு
மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 4 மாவட்டங்களில் திடீர் வன்முறை ஏற்பட்டது. கல்வீச்சில் தாசில்தார், போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
5. வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் கைது: டெல்லியில் 144 தடை உத்தரவு - போலீசார் கொடி அணிவகுப்பு
டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.