65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்: கேரள மந்திரி நடத்தி வைத்தார்


65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணம்: கேரள மந்திரி நடத்தி வைத்தார்
x
தினத்தந்தி 29 Dec 2019 9:19 PM GMT (Updated: 29 Dec 2019 9:19 PM GMT)

65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு கேரள மந்திரி திருமணத்தை நடத்தி வைத்தார்.

பெரும்பாவூர்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யர் (வயது 70). இவர் சமையல் வேலை செய்தார். இவரிடம் கொச்சுஅனியன் (67) என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணய்யர் இறந்து விட்டதால் அவருடைய மனைவி லட்சுமி அம்மாளை (66) ராமபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இவரை கொச்சுஅனியன் அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறி வந்தார். அப்போது இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் வகையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த முடிவை முதியோர் இல்லத்தில் உள்ள சூப்பிரண்டு வி.ஜி.ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். அவரும் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதையொட்டி 2 பேரின் திருமணமும் முதியோர் இல்லத்தில் வைத்து நடந்தது. இந்த திருமண விழாவுக்கு மாநகராட்சி மேயர் அஜிதா விஜயன் தலைமை தாங்கினார்.

விழாவில் மந்திரி சுனில்குமார் கலந்து கொண்டு 2 பேருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.

Next Story