ஜம்மு காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் விடுதலை


ஜம்மு காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் விடுதலை
x
தினத்தந்தி 30 Dec 2019 12:18 PM GMT (Updated: 30 Dec 2019 12:18 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்தது. வன்முறைகள் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 

போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனக்கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இன்று அரசியல் தலைவர்கள் 5 பேரை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விடுதலை செய்துள்ளது. எனினும் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  

தற்போது விடுவிக்கப்பட்ட 5 பேரும் எம்.எல்.ஏ. விடுதியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த எம்.எல்.ஏ. விடுதியில் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மந்திரிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

Next Story