இந்தியாவின் வனம், மரங்கள் பரப்பு அதிகரிப்பு: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்


இந்தியாவின் வனம், மரங்கள் பரப்பு அதிகரிப்பு: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 30 Dec 2019 9:32 PM GMT (Updated: 30 Dec 2019 9:32 PM GMT)

இந்தியாவின் வனம், மரங்கள் பரப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் வன வளத்தை இந்திய வன ஆய்வகம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்கிறது. 2017-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.

அதில், கடந்த 2 ஆண்டுகளில் நாட்டின் வனம் மற்றும் மரங்கள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் வனங்கள் பரப்பளவு 3 ஆயிரத்து 976 சதுர கிலோ மீட்டரும் (0.56 சதவீதம்), மரங்கள் பரப்பு 1,212 சதுர கிலோ மீட்டரும் (1.29 சதவீதம்) அதிகரித்துள்ளது. வனப்பகுதிக்கு வெளியிலும் கூட வன பரப்பும், மரங்கள் பரப்பும் உயர்ந்து இருப்பதாக பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மாநிலவாரியாக எடுத்துக் கொண்டால், கர்நாடகா (1,025 சதுர கி.மீ.), ஆந்திரா (990 சதுர கி.மீ.), கேரளா (823 சதுர கி.மீ.), காஷ்மீர் (371 சதுர கி.மீ.), இமாசலபிரதேசம் (334 சதுர கி.மீ.) ஆகிய 5 மாநிலங்களில் வன பரப்பு அதிகஅளவில் உயர்ந்துள்ளது. மூங்கில் காடுகள் பரப்பளவு 3 ஆயிரத்து 229 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. மாங்குரோவ் காடுகள் பரப்பு 54 சதுர கி.மீ. அதிகரித்துள்ளது. ஆனால், வடகிழக்கு பிராந்தியத்தில் காடுகள் பரப்பளவு 765 சதுர கி.மீ. குறைந்துள்ளது.


Next Story