ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் எஸ்.எம்.எஸ் சேவை
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் எஸ்.எம்.எஸ் சேவை வழங்கப்படுகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் வசதி, இணைய வசதி ரத்து செய்யப்பட்டது. லேண்ட்லைன் வசதி இணைப்பும் ரத்து செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த அரசு நிர்வாகம், தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது. லேண்ட் லைன் போன் வசதியும், மொபைல் போஸ்ட் பெய்ட் வசதியும் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் வசதியும், அரசு மருத்துவமனைகளில் மட்டும் இணைய வசதியும் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story