இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை, அரசின் உத்தரவுப்படி தான் செயல்படுகிறோம் - பிபின் ராவத்


இந்திய ராணுவத்தில் அரசியல் தலையீடு இல்லை, அரசின் உத்தரவுப்படி தான் செயல்படுகிறோம் - பிபின் ராவத்
x
தினத்தந்தி 1 Jan 2020 11:29 AM IST (Updated: 1 Jan 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

முப்படைகளில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ராணுவப்படை , விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றும் நேரத்தில், முப்படை தளபதி பதவியை உருவாக்க மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது.  ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நேற்று (டிச.31) ஓய்வு பெற்ற பிபின் ராவத், முப்படைகளின் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள  பிபின் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; - “  ராணுவ நடவடிக்கைகளில் தரைப்படை, கடற்படை, விமானப்படை இணைந்து செயல்படும்.  முப்படைகளில் ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  அரசியல் சார்ந்து செயல்படாமல் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே செயல்படுகிறோம்” என்றார். 

Next Story