புத்தாண்டையொட்டி உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புத்தாண்டையொட்டி உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 1 Jan 2020 7:30 PM IST (Updated: 1 Jan 2020 7:30 PM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டையொட்டி உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு  நிறைவடைந்த நிலையில், 2020-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை உலக முழுவதும்  நேற்று நள்ளிரவு முதல் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வரவேற்று வருகின்றனர். பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த 2020-ம் புத்தாண்டு உலகிலேயே முதன்முதலாக நியூசிலாந்தில் பிறந்தது.

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வானவேடிக்கைகளுடன், கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே , பிரதமர் மகிந்த ராஜபக்சே, வங்காள தேசம், மாலத்தீவு, நேபாளம், பூடான் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Next Story