டெல்லியில் பேட்டரி தொழிற்சாலையில் தீவிபத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர்
டெல்லியின் பீராகரி பகுதியில் இன்று காலை ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர்.
புதுடெல்லி
டெல்லியின் பீராகரி பகுதியில் இன்று காலை ஒரு பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பேட்டரிகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக தீ விரைவாக பரவியது. மற்றும் வெடித்து சிதறியதால் தொழிற்சாலை கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட பலர் சிக்கியுள்ளனர்.
இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் மீட்பு நடவடிக்கைக்கு தேசிய பேரிடர் மீட்பு படை அழைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.
Related Tags :
Next Story