சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமிக்க உத்தரவிட்டதற்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு


சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமிக்க உத்தரவிட்டதற்கு எதிராக  டாடா சன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு
x
தினத்தந்தி 2 Jan 2020 7:45 AM GMT (Updated: 2 Jan 2020 9:26 AM GMT)

சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமிக்க உத்தரவிட்டதற்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் சைரஸ் மிஸ்திரி அப்பதவியிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். பதவி நீக்கத்திற்குப் பிறகு, டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சட்டப் போராட்டம் தொடங்கியது. 

டாடா குழுமத்திற்கு எதிராக சைரஸ் மிஸ்திரி மும்பை உயர் நீதிமன்றத்திலும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்திலும் 2016-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மிஸ்திரி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், கம்பெனிகள் சட்டப்படி தன்னை பதவி நீக்கவில்லை என்று மிஸ்திரி குற்றம் சாட்டியிருந்தார். 

இதில், கடந்த டிசம்பர் 18 ஆம்  தேதி தீர்ப்பளித்த, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம், சந்திரசேகரனின் நியமனம் சட்டவிரோதம்  சைரஸ் மிஸ்திரியை மீண்டும் செயல் தலைவர் பதவியில் அமர்த்தவும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமிக்க உத்தரவிட்டதற்கு எதிராக டாடா சன்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று  டாடா சன்ஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story