விண்வெளியில் இந்தியா பெற்ற வெற்றிகள், ஆழ்கடலிலும் பிரதிபலிக்க வேண்டும் - பிரதமர் மோடி


விண்வெளியில் இந்தியா பெற்ற வெற்றிகள், ஆழ்கடலிலும் பிரதிபலிக்க வேண்டும் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 Jan 2020 8:06 AM GMT (Updated: 3 Jan 2020 8:06 AM GMT)

விண்வெளியில் இந்தியா பெற்ற வெற்றிகள், ஆழ்கடலிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற அறிவியல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி கூறியதாவது ; - “புதிய புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சியானது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்புடையதாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன பெங்களூருவில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.2020 ஆம் ஆண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நேர்மறை , நம்பிக்கையுடன் தொடங்கும்போது, ​​நமது கனவை நிறைவேற்றுவதற்கான மற்றொரு படியை எடுக்கிறோம்.

கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது, உற்பத்தி, செழிப்பு ஆகிய நான்கும் தேசத்தின் வளர்ச்சிக்கு தேவையான முன்னெடுப்புகள் ஆகும். விண்வெளியில் இந்தியா பெற்ற வெற்றிகள், ஆழ்கடலிலும் பிரதிபலிக்க வேண்டும். 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் வெற்றியைச் சார்ந்தே இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உகந்த சூழலை உருவாக்க தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்.  புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான குறியீட்டில் இந்தியா 52 -வது இடம் முன்னேறியிருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பயிர்க்கழிவுகள் எரிப்பு உள்பட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் நிபுணர்கள் தீர்வு காண வேண்டும்” என்றார்.

Next Story