மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜக முதல்-மந்திரி எதிர்ப்பு
மோடியின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அசாம் முதல்-மந்திரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எதிர்ப்பு தெரிவித்த முதல் பாஜக முதல்-மந்திரி இவர் ஆவார்.
கவுகாத்தி
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகும் முஸ்லீம் அல்லாத பிற மதத்தினரான இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமைச்சட்டம் 1955- ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு குடியுரிமைச் திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
கடந்த மாதம் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கேரள முதலவர் பினராய் விஜயன் குடியுரிமைச் திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
இந்த நிலையில் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் ட்வீட் செய்ததைத் தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டம் 2019 (சிஏஏ) பற்றிய விவாதத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது.
நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் வீடியோவை வெளியிட்டு முதல்வர் சோனோவால் தனது ட்விட்டரில் : "அசாமின் மகன் என்ற முறையில் நான் ஒருபோதும் எனது மாநிலத்தில் வெளிநாட்டினரை குடியேற அனுமதிக்க மாட்டேன். இந்த சர்பானந்தா சோனோவால் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் ..." என கூறி உள்ளார்.
As a son of Assam, I will never settle foreigners in my state. This Sarbananda Sonowal will never allow this...
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) 2 January 2020
https://t.co/vjoexMdicj
My commitment towards Assam and the Assamese society will forever remain intact.
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) 1 January 2020
I have come out of this land with the blessings of the people of Assam and will never forget that, even if I am in a national party. pic.twitter.com/u7MkfO7Exe
Related Tags :
Next Story