குடியுரிமை திருத்த சட்டம் விதிமுறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு எச்சரிக்கை
குடியுரிமை திருத்த சட்டம் விதிமுறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
புதுடெல்லி
குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 நாட்களுக்கு மேலாக, சட்டத்தை நிர்வகிக்கும் விதிகளை உருவாக்குவதில் அரசாங்கம் எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை ஒரு பகிரங்க கடிதத்தின் மூலம் பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், ஊடுருவலுக்கு குடியுரிமை திருத்த சட்டம் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்து இருந்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை கேட்டு கேரள சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. மேற்கு வங்காளம், மராட்டியம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஏழு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்த மறுத்துவிட்டன.
குடியுரிமை திருத்த சட்டம் விதிகளை உருவாக்குவது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த ஆறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் இந்த சட்டத்தில் உள்ள போதிலும், விண்ணப்பதாரர்கள் 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் நாட்டிற்குள் நுழைந்ததை நிரூபிக்க வேண்டும் .
குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதற்கு அவர்கள் சில ஆதாரங்களைக் காட்ட வேண்டும்; குடியுரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு விண்ணப்பமும் கவனமாக ஆராயப்படும்.
அரசாங்கம் இன்னும் இதுகுறித்த ஆலோசனைகளை மாநிலங்களிடம் கேட்கவில்லை, ஆனால் விதிகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு அம்சத்தையும் மிகச்சிறப்பாக ஆராய்ந்து வருகிறது. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சரிபார்ப்பும் உள்ளூர் காவல்துறையினரால் செய்யப்பட வேண்டும் என கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் விதிகளை வகுக்க மாநில அரசு உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை வழங்கியதாக அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story