மராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: யாருக்கு என்ன பொறுப்பு?


மராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு: யாருக்கு என்ன பொறுப்பு?
x
தினத்தந்தி 5 Jan 2020 6:07 AM GMT (Updated: 5 Jan 2020 6:07 AM GMT)

மராட்டியத்தில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்து உள்ளது. கடந்த நவம்பர் மாதம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். இதன்பின்னர் ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த டிசம்பர் 30-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 3 கட்சிகளை சேர்ந்த 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

தற்போது மராட்டிய மந்திரிசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோரை சேர்த்து மொத்தம் 43 மந்திரிகள் உள்ளனர். மந்திரிசபையில் ஏற்கனவே 3 கட்சிகளுக்கும் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், அந்த இலாகாக்களை தொடக்கத்தில் பதவி ஏற்ற 6 மந்திரிகள் கவனித்து வந்தனர். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் தாமதம் நீடித்து வந்தது.   முதல் மந்திரி உத்தவ் தாக்ரே முன்மொழிந்த இலாகா பட்டியல் ஆளுநரின் ஒப்புதலுக்கு நேற்று மாலை அனுப்பப்பட்டது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஒப்புதலை அளித்ததையடுத்து, மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. 

இலாகா ஒதுக்கீடு விவரம்: 

துணை முதல் மந்திரி அஜித் பவார்-  நிதித்துறை 
அனில் தேஷ்முக்- உள்துறை 
ஆதித்ய தாக்ரே - சுற்றுலாத்துறை 

பாலாசஹேப் தோரட்- வருவாய்துறை பொறுப்பு 
நவாப் மாலிக் - சிறுபான்மையினர் நலத்துறை
அவ்கப் - திறன் வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சித்துறை
சகன் புஜ்பால் - உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு

ஜெயந்த் பாடில் - நீர்வளத்துறை
அசோக் சவான் - பொதுப்பணித்துறை
 அப்துல் சத்தார் - வருவாய் இணையமைச்சர், கிராமப்புற வளர்ச்சி, துறைமுக வளர்ச்சி துறை
தனஞ்ஜெய் முண்டே-சமூக நீதி

Next Story