பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும்; துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி


பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும்; துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி
x
தினத்தந்தி 5 Jan 2020 8:19 AM GMT (Updated: 5 Jan 2020 8:19 AM GMT)

பீகாரில் என்பிஆர் பணிகள் மே 15 ஆம் தேதி தொடங்கும் என்று துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.

பாட்னா, 

பீகாரில் என்.பி.ஆர் பணிகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக சுஷில் குமார் மோடி கூறுகையில், “ 2020-ம் ஆண்டு தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிவரை நடக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பீகார் மாநிலத்தில் மே 15-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை  நடைபெறும். 

எந்த மாநில அரசும் என்பிஆர் செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரம் இல்லை. என்பிஆருக்கும், என்ஆர்சிக்கும் எந்தவிதமான  தொடர்பும் கிடையாது. என்ஆர்சி நாடு முழுவதும் அமலாகாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்துள்ளார்” என்றார். 

Next Story