மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி?


மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்காந்தி?
x
தினத்தந்தி 5 Jan 2020 2:25 PM GMT (Updated: 5 Jan 2020 2:25 PM GMT)

ராகுல்காந்தி மீண்டும் 2-வது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

மீண்டும் பதவியை ஏற்கும்படி  மூத்த தலைவர்கள்,  நிர்வாகிகள் வற்புறுத்திய போது அவர் மறுத்து விட்டார். இதனால் வேறு வழியில்லாமல் இடைக்கால தலைவராக சோனியா காந்தியை நியமனம் செய்தார்கள். விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. 

இந்நிலையில், ராகுல்காந்தி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இன்னும் ஒன்றிரண்டு வாரத்தில் மாற்றம் இருக்கும் என்று என்றும் அவர்கள் கூறினார்கள்.

தலைவர் பதவி ராஜினாமாவுக்கு பிறகு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதை ராகுல் காந்தி குறைத்து இருந்தார். ஆனால், சமீபகாலமாக மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணி மற்றும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் போன்றவற்றில் ஆர்வமாக பங்கேற்றார். 

இடையில் மராட்டியம், அரியானா, ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்திலும் பங்கு பெற்றார். இதையடுத்து மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல நடைபெற இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த புதிய தலைவர் நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story