ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரம்: ஈரான் மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு


ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரம்:  ஈரான் மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 5 Jan 2020 10:03 PM IST (Updated: 5 Jan 2020 10:03 PM IST)
t-max-icont-min-icon

ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஈரான் மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

புதுடெல்லி, 

அமெரிக்க படைகளின் ஏவுகணை தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பொறுமையை கடைப்பிடிக்குமாறு இந்தியா ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஜரிப்புடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, நிகழ்வுகள் மிக தீவிரமான திருப்பத்தை அடைந்துள்ளதாகவும், பதற்றம் தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

மேலும், எப்போதும் தொடர்பில் இருக்க இருவரும் முடிவு செய்தனர். இந்த தகவலை ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Next Story