ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் வன்முறை: அரவிந்த் கெஜ்ரிவால் மந்திரிகளுடன் ஆலோசனை


ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் வன்முறை: அரவிந்த் கெஜ்ரிவால் மந்திரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 6 Jan 2020 10:26 AM IST (Updated: 6 Jan 2020 10:26 AM IST)
t-max-icont-min-icon

ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேற்று வன்முறை நடைபெற்ற நிலையில், டெல்லி முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கியது.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன் டெல்லி வன்முறை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Next Story