அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 7 Jan 2020 8:18 AM IST (Updated: 7 Jan 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இந்த, உரையாடலின் போது இரு தலைவர்களும் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

புதுடெல்லி, 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  அரசு தரப்பில் இது பற்றி கூறப்பட்டு இருப்பதாவது; -  

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை  உள்ளிட்டவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு, தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் பிரதமர் மோடி, டிரம்புடனான உரையாடலின் போது குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டு, இருநாடுகளுக்கு இடையேயான முக்கியத்தும் வாய்ந்த பங்களிப்பில்  குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டு இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பரஸ்பர நலன்கள் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த டிரம்புடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.  

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்திய மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story