நாடு முழுவதும் தொடர் போராட்டம் எதிரொலி: ஜனவரி 11-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் ஜனவரி 11-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து குடிமக்கள் பதிவேடு போன்றவைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையில் வரும் 11-ம் தேதி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story