இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியை எட்டும்- உலக வங்கி கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
ஜனவரி 2020 உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டு உள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டிற்கான திட்டம் மிகவும் சிறப்பாக இல்லை என்றாலும், அடுத்த 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8% ஆக உயரும் என்று கூறுகிறது.
2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட "குறிப்பிடத்தக்க பலவீனத்திலிருந்து" முதலீடு மற்றும் வர்த்தகம் படிப்படியாக மீட்கப்படும் என்று உலக வங்கி கணித்துள்ளதால், உலகப் பொருளாதாரமும் 2020 ஆம் ஆண்டில் சற்று உயரும் என கூறப்பட்டு உள்ளது.
உலக வங்கி குழுமத்தின் சமமான வளர்ச்சி, நிதி மற்றும் நிறுவனங்களுக்கான துணைத் தலைவர், செலா பசர்பசியோக்லு கூறியதாவது,
பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்க வாய்ப்புள்ள நிலையில், ஆட்சியாளர்கள் வறுமைக் குறைப்புக்கு அவசியமான பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை அதிகரிக்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.
வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கான படிகள், சட்டத்தின் ஆட்சி, கடன் மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவை நிலையான வளர்ச்சியை அடைய உதவும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story