ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள் ; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு


ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள் ; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 6:41 AM IST (Updated: 10 Jan 2020 11:33 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்துக்கும், தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டனர்.  பிற மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பாசின் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 


Next Story