மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Jan 2020 1:16 PM IST (Updated: 10 Jan 2020 1:16 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.   

மக்கள் தொகை பெருக்கம் மிகவும் அபாயகரமானது எனவும் நாட்டின்  வளர்ச்சியை மக்கள்  தொகை பெருக்கம் பாதிக்கும் எனவும் ஆரோக்கியமான, அறிவார்ந்த, வளர்ச்சியடைந்த வலிமையான இந்தியாவை உருவாக்க மக்கள்  தொகை பெருக்கம் தடையாக உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Next Story