குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 - ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி


குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 - ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி
x
தினத்தந்தி 10 Jan 2020 7:29 PM IST (Updated: 10 Jan 2020 7:29 PM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

அமராவதி,

ஆந்திர முதல்- மந்திரியாக கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தற்போது மேலும் ஒரு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். 

இந்த திட்டத்தின் பெயரான  ‘ஜெகனண்ணா அம்மா வோடி' என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.  இத்திட்டத்தின்படி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் 43 லட்சம் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படும். இதற்காக நடப்பாண்டில் ரூ.6455.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் வரையில் இந்த பணம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தாய்மார்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பணம் பெறுவதற்கு  சில வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி,  அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்துக்கு தகுதியானவர்கள். மாணவருக்கு 75 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும். 

அரசு ஊழியர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தாது. ஆதரவற்றோர் மற்றும் தெருவோர குழந்தைகளை பராமரித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பொருந்தும். ஆனால், உரிய விசாரணை மற்றும் தகவல் சரிபார்ப்புக்கு பின்னர் நிதி வழங்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த இந்த  திட்டத்தால் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story