டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சைரஸ் மிஸ்திரி மறுநியமன உத்தரவுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சைரஸ் மிஸ்திரி மறுநியமன உத்தரவுக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2020 1:28 AM IST (Updated: 11 Jan 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

டாடா சன்ஸ் நிர்வாக தலைவராக சைரஸ் மிஸ்திரியை மறுநியமனம் செய்வதற்கான உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மிஸ்திரியை மீண்டும் நிர்வாக தலைவராக நியமிக்க தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால், மிஸ்திரி பதவி ஏற்கவில்லை.

இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டாடா சன்ஸ் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, மிஸ்திரி மறுநியமன உத்தரவுக்கு நேற்று இடைக்கால தடை விதித்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவில் அடிப்படை தவறுகள் உள்ளதாகவும், அதை விரிவாக விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

Next Story