தேசிய செய்திகள்

ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு + "||" + Death of the King of Oman; Mourning tomorrow in India

ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு
ஓமன் நாட்டின் மன்னர் காலமானதையடுத்து இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79.  1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.  இந்நிலையில், நேற்று காபூஸ்  மரணமடைந்ததாக  ஓமன் அரசு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஓமன் மன்னர் சுல்தான் மறைவுக்கு நாளை இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாளை தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்வுகள் எதுவும் நாளை நடைபெறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 204 ரன்கள் இலக்கை இந்திய அணி 19-வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது.
2. மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசுகிறது-ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
மீன் தண்ணீருக்கு செல்வதைப்போல மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசிவருகிறது என ஐ.நா.வின் இந்திய நிரந்தர துணை தூதர் நாகராஜ் நாயுடு கூறி உள்ளார்.
3. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி பந்தாடியது இந்தியா
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, அறிமுக அணியான ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி துவம்சம் செய்தது.
5. கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா சதத்தால் இந்தியா அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அபார சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.