தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருட்டு + "||" + 185 cell phones stolen at police station

போலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருட்டு

போலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருட்டு
போலீஸ் நிலையத்தில் 185 செல்போன்கள் திருடப்பட்டது.
புனே,

பொதுமக்கள் தங்கள் பணம், நகை, உடைமைகள் திருட்டு போனால் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுப்பார்கள். ஆனால் மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையத்திலேயே பெரிய திருட்டு சம்பவம் நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபற்றிய விவரம் வருமாறு:-

கோலாப்பூரில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் உள்ளது ஜெய்சிங்பூர் போலீஸ் நிலையம். பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் 185 செல்போன்களை பறிமுதல் செய்திருந்தனர். அந்த செல்போன்களை அவர்கள் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து இருந்தனர். சம்பவத்தன்று இரவு யாரோ மர்மநபர்கள் அந்த அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த 185 செல்போன்களையும் திருடிவிட்டு தப்பிச்சென்றனர். போலீஸ் நிலையத்துக்குள் திருட்டு நபர்கள் புகுந்து செல்போன்களை திருடிச்சென்றது தெரியாமல் தான் இரவு பணியில் போலீசார் இருந்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருக்கோவிலூர், போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவர் கைது
திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
2. போலீஸ் நிலைய பாதுகாப்பு பெட்டக பூட்டை உடைத்து மதுபானம் திருடிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 மதுபாட்டில்களை திருடியதாக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
3. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் நிரம்பி வழியும் இருசக்கர வாகனங்கள்
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களால் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிரம்பி வழிகிறது.
4. சூலூரில், போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு
சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அரிவாளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. பெரம்பலூர் போலீஸ் நிலையத்தை காணவந்த பள்ளி குழந்தைகள்
பெரம்பலூர் போலீஸ் நிலையத்தினை காணவந்த பள்ளி குழந்தைகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீசார் வரவேற்றனர்.