குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்


குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 13 Jan 2020 10:59 AM IST (Updated: 13 Jan 2020 10:59 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்டம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது;-

பிரதமர் மிகவும் வெளிப்படையான விமர்சகர்களில் ஐந்து பேரைத்  தேர்ந்தெடுத்து அவர்களுடன் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த  விவாதத்தை கேட்டு மக்கள் தங்கள் முடிவுகளை எடுத்து கொள்ளட்டும். இந்த ஆலோசனைக்கு பிரதமர் சாதகமாக பதிலளிப்பார் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் என கூறி உள்ளார்.

Next Story