பயங்கரவாதிகளுக்கு உதவிய டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதியாகவே விசாரணை நடத்தப்படும் -ஜம்மு காஷ்மீர் போலீஸ்


பயங்கரவாதிகளுக்கு உதவிய டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதியாகவே விசாரணை நடத்தப்படும் -ஜம்மு காஷ்மீர் போலீஸ்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:44 AM IST (Updated: 13 Jan 2020 11:44 AM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைதான டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதிகளுக்கு இணையான முறையிலேயே விசாரணை நடத்தப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் அறிவித்து உள்ளது.

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவிந்தர் சிங், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளான நவீத் பாபா, ரபி அகமது ஆகியோரை சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பிச் செல்ல காரில் அழைத்துச் சென்றபோது பிடிபட்டார். அவரிடம் காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு, மாநில உளவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு இணையான முறையிலேயே  தேவிந்தர்சிங்கிடம் விசாரணை செய்யப்படும் என காஷ்மீர் ஐஜி விஜய குமார் தெரிவித்துள்ளார். தேவிந்தர் சிங்குக்கு இந்த மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story